பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இசை மீது கொண்ட ஆர்வத்தினால் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தவர் தமன்.தமிழ்,தெலுங்கு என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தெலுங்கில் இவர் இசையமைக்கும் படங்கள் பெரிய வரவேற்பை பெறும்.இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இவரது பாடல்கள் செம ஹிட் அடித்து மில்லியன்,பில்லியன் என பார்வையாளர்களை அள்ளி வருகிறது.

அடுத்ததாக சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ்,தளபதி விஜயின் வாரிசு,மகேஷ் பாபுவின் SSMB 28 என பல முக்கிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் தமன் அவ்வப்போது சில தகவல்களையும் பகிர்ந்து வருவார்.தற்போது ஒரு பதிவினை தமன் பகிர்ந்துள்ளார்.அவரது பல நாள் கனவு நிறைவேறியுள்ளது என்றும் மறக்கமுடியாத நாள் இறைவனுக்கும் அம்மாவுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவினை அவர் தமிழில் வெளியிட்டுள்ளதால் , இது வாரிசு படத்தினை குறிக்கும் ஒரு பதிவு என தெரிகிறது.தமன் விஜயின் பெரிய ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த படத்தில் விஜய் ஒரு பாடல் பாடுகிறார் என்ற தகவலும் இருந்து வருகிறது.இன்று தமன் இந்த பதிவை தமிழில் பதிவிட்டுள்ளது , விஜய் இந்த படத்தில் பாடியுள்ளார் என்பதை உறுதிசெய்வது போல தமன் இந்த பதிவை செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.