100 படத்தின் வெற்றியை தொடர்ந்து அதர்வா தன்னை வைத்து பூமராங் படத்தை இயக்கிய கண்ணனுடன் இணைகிறார்.இந்த படத்தையும் இயக்குனர் கண்ணன் தயாரிக்கிறார்.இந்த படத்தில் பிரேமம்,கொடி உள்ளிட்ட படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினாக நடிக்கிறார்.

Thalli Pogathe Atharvaa Birthday Special Poster

இந்த படம் தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான நின்னு கோரி படத்தின் ரீமேக் என தகவல் கிடைத்துள்ளது.தெலுங்கில் நானி-நிவேதா தாமஸ் நடித்த வேடங்களில் அதர்வா மற்றும் அனுபமா தமிழில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்திருந்தது.

Thalli Pogathe Atharvaa Birthday Special Poster

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்திற்கு தள்ளிப்போகாதே என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படத்தின் நாயகன் அதர்வாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.