தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாகவும் ரசிகர்களின் உடன்பிறவா அண்ணனாகவும் விளங்குபவர் தளபதி விஜய். அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தி நடித்து வருகிறார். 

bigil

இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷ்ராஃப், கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

bigil

தனது ஷூட்டிங்கை முடித்த விஜய் படத்தில் வேலைபார்த்த அனைவருக்கும் தங்க மோதிரத்தை பரிசளித்துள்ளார். மேலும் இது கால்பந்து சம்பந்தப்பட்ட படம் என்பதனால் படத்தில் வீரர்,வீராங்கனைகளாக நடித்தவர்களுக்கு தனது ஆட்டோகிராஃப் போட்ட கால்பந்தையும் பரிசளித்துள்ளார். தற்போது விஜய்யிடம் பரிசு பெற்ற அம்ரிதா ஐயர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தான் நேசித்த நடிகரிடம் பரிசு பெறுவது மகிழ்ச்சி தானே.

amirthaiyer