லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி வருகிறது. 

Thalapathy Vijays Birthday Treat From Master Team

கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. விரைவில் இந்நிலையை கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி, தளபதியை பெரிய திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 

Thalapathy Vijays Birthday Treat From Master Team

தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக பணிபுரிந்துள்ள இயக்குனர் ரத்னகுமார், கலாட்டா குழுவுடன் முகநூல் லைவ்வில் தோன்றினார். மாஸ்டர் திரைப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசியவர், தளபதியின் பிறந்தநாளன்று படக்குழுவினர் சார்பாக ஒரு சர்ப்ரைஸ் இருக்கும் என்று கூறியுள்ளார். போஸ்டர், டீஸர், ட்ரைலர் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நிச்சயம் கொண்டாட்டமாக இருக்கும். அதற்குள் மக்கள் கொரோனாவிலிருந்து இயல்பு நிலைக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.