தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தனது கடின உழைப்பால் முன்னேறி தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடித்த மாஸ்டர் படம் கடைசியாக வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் Beast படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.இதனை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார்.

இதேபோல தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனது இசையின் மூலம் நீங்கா இடம் பிடித்தவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.20 வருடங்களாக தனது சூப்பர்ஹிட் பாடல்களால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார்.அடுத்ததாக இவர் இசையில் அஜித்தின் வலிமை உள்ளிட்ட சில படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

தற்போது தளபதி விஜயுடன் சமீபத்தில் சந்தித்த புகைப்படம் ஒன்றை யுவன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தமிழ் சினிமாவின் இருபெரும் நட்சத்திரங்கள் சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.யுவன் இசையில் விஜய் 2003-ல் வெளியான புதிய கீதை படத்தில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,இதை தவிர யுவனின் முதல் படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளார் மற்றும் விஜயின் Friends படத்தில் யுவன் ஒரு பாடலை பாடியுள்ளார்.

கடைசியாக வெளியான மாஸ்டர் படத்தில் யுவன் ஒரு பாடல் பாடியிருந்தார்.விஜயுடன் யுவன் எப்போது சேரப்போகிறார் என்று ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்த வேளையில் இப்படி ஒரு புகைப்படம் வந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்றியுள்ளது.

இந்த சந்திப்பு மாஸ்டர் படத்தை போல பீஸ்ட் படத்திலும் யுவன் ஏதேனும் பாடல் பாடியுள்ளாரா,இல்லை தளபதி 66 அல்லது அதற்கு அடுத்த படத்திற்கு இசையமைக்கிறாரா போன்ற பல கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது,என்றாலும் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.