தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy Vijay Wishes Rathna Kumar Thalapathy 64

மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.சாந்தனு,ஆன்டனி வர்கிஸ்,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thalapathy Vijay Wishes Rathna Kumar Thalapathy 64

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.ஆடை பட இயக்குனர் ரத்னகுமார் இந்த படத்தில் ஒரு பங்கு வகிக்கிறார்.இன்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு தளபதி விஜய் ரத்னகுமாருக்கு போன் செய்து லோகேஷ் கனகராஜை போல் மிமிக்கிரி செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Thalapathy Vijay Wishes Rathna Kumar Thalapathy 64

இது குறித்து பதிவிட்டுள்ள ரத்னகுமார் சில காரணங்களால் தன்னால் இன்று டெல்லி செல்ல முடியவில்லை என்றும் தனக்கு விஜய் போன் செய்ததை பதிவிட்ட ரத்னகுமார் வாழ்க்கை மிகவும் அழகாக செல்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.