கார்த்தி நடிப்பில் கொம்பன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் தயாராகி இன்று பிரம்மாண்டமாக ரிலீஸாகியுள்ள படம் விருமன்.கார்த்தி முதல் முறையாக ஒரே இயக்குனருடன் இரண்டாவது முறையாக இணைகிறார் என்பதால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த படத்தினை சூர்யாவின் 2D எண்டெர்டைன்மெண்ட்ஸ் தயாரித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக திரையுலகில் என்ட்ரி கொடுக்கிறார்.

பிரகாஷ்ராஜ்,ராஜ்கிரண் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் சிறப்பு காட்சிகள் பல இடங்களில் திரையிடப்பட்டன.

சென்னையில் திரையிடப்பட்ட ஒரு சிறப்பு காட்சியில் ஷங்கர் குடும்பத்தினர்,அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் படம் பார்த்து ரசித்தனர்.அவர்களுடன் தளபதி விஜயின் மனைவி சங்கீதா விஜய் படம் பார்த்தார்.இதுகுறித்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.