தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் அன்புமிக்க அண்ணனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை ருசித்த அவர், நெல்சன் திலிப்குமார் இயக்கவிருக்கும் தளபதி 65 படத்திற்கு தயாராகி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

கடந்த வார இறுதி நாட்களில் மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் 23 மில்லியன் டாலர் வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது. இதனால் மற்ற ஹாலிவுட் படங்களைக் காட்டிலும் இப்படம் இரண்டு மடங்கு அதிகம் வசூலைப் பெற்றுள்ளது தெரிய வந்திருக்கிறது. பல நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டாலும், உலக அளவில் மாஸ்டர் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.

அதே போல இந்த படத்தை இந்தியில் எடுக்க உள்ளதாகவும் அதில் விஜய் கதாபத்திரத்தில் ரித்திக் ரோஷன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தளபதி விஜய்யின் த்ரோபேக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தளபதி விஜய்யே ரசிகர்களை பிரான்க் செய்வதற்காக பைக்கில் எடுத்து கிளப்பி கொண்டு சென்றுள்ளார். ஹெல்மெட்டுடன் போனாலும் சிலர் விஜயினை அடையலாம் கண்டுகொண்டுவிட்டார்கள். அதனை பெரிதுபடுத்தாமல் அப்படியே இருந்ததால் எந்த கூட்டமும் கூடாமல் இருந்தது. பின்னர் சாலை ஓரத்தில் இருக்கும் ஒருவரிடம் சென்று அண்ணா இங்க தனலட்சுமி அவென்யு எப்படி போறது என்று கேட்கிறார்.

அதற்க்கு அவர் விஜய் தான் என்பதை தெரியாத அந்த நபரோ அதற்கும் வழியினை சொல்கிறார். இவர் எப்படியாவது தன்னை கண்டுபிடிப்பாரா? என்று பார்த்து கொண்டிருந்த விஜய்க்கு கடைசி வரை அது நடக்கவே இல்லை. இறுதியில் அவரே க்ளு கொடுப்பது போன்று ” அண்ணே நடிகர் விஜய் வீடு அங்க தான் இருக்கா? என கேலியாக கேட்ட பிறகும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பழைய வீடியோவாக இருந்தாலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வளம் வருகிறது. இது எப்போதோ எடுக்கப்பட்ட வீடியோவாக இருந்தாலும் யாரோ ஒரு ரசிகர் இதனை பகிர்ந்ததால் இதனை பார்க்காத அனைவரும் இதனை ட்ரென்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்தவீடியோ வை பார்க்க வில்லை என்றால் இதோ அந்த வீடியோ