தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன்பிறவா அண்ணனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். விஜய் எனும் மூன்றெழுத்து மந்திரம், தமிழ் திரையுலகின் தாரக மந்திரமாக ஒலிக்கிறது. படத்திற்கு படம் அவரது பாக்ஸ் ஆபீஸ் வசூல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல இயக்குனர்களின் ஆதர்ஷ நாயகனாக இருந்து வருகிறார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் என்ற ருசிகர செய்தியை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உறுதி செய்தார். 

ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு தான் இருக்கின்றன. மீண்டும் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றிய விவரமும் தெளிவாக இல்லை.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் தளபதி விஜய். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கலாம் என்று கூறப்படுகிறது. 

சில தினங்களுக்கு முன் தனது பிறந்தநாளை கொண்டாடிய மகேஷ் பாபு, தனது பிறந்தநாள் அன்று க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று மரக்கன்று ஒன்றை நட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.மேலும் இதனை ஏற்குமாறு தளபதி விஜய்,ஜூனியர் NTR,ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரை நாமினேட் செய்துள்ளார்.

விஜய்யும், மகேஷ் பாபுவும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் தெரிந்ததே. தமிழில் விஜய் எப்படியோ அப்படி ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை தெலுங்கில் கொண்டவர் மகேஷ் பாபு. மகேஷ் பாபுவின் சில படங்களை விஜய் ரீமேக் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மகேஷ் பாபுவின் இந்த சவாலை ஏற்று மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார் தளபதி விஜய். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.