தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வரும் நடிகர்கள் தளபதி விஜய் மற்றும் சூர்யா.இருவரும் சினிமா சம்மந்தப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.தங்கள் ஆரம்பகாலத்தில் அதிகமாக விமர்சனங்களை சந்தித்த நடிகர்கள்,பல தோல்விகளை தாண்டி வெற்றிகண்ட நடிகர்கள் என்று இருவருக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருக்கின்றன.

கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் தங்கள் ஹீரோவாக சேர்ந்து தங்கள் திரைப்பயணத்தை தொடங்கினர்.தற்போது இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக வளர்ந்து நிற்கின்றனர்.இருவருக்கும் தனி தனியாக ரசிகர் பட்டாளங்கள் உண்டு.விஜய் பாட்டு,நடனம் என்று ஒரு எண்டெர்டைனராக உருவெடுக்க, சூர்யா வித்தியாசமான கதையம்சம் கொண்ட கதைகளில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

விஜய் சூர்யா இருவரும் பல வருடங்களாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்,சூர்யா தனது முதல் படமான நேருக்கு நேர் படத்தில் விஜயுடன் இணைந்து மற்றொரு ஹீரோவாக நடித்திருந்தார்.பின்னர் சில வருடங்களுக்கு பிறகு ப்ரண்ட்ஸ் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.அதன்பின் சூர்யாவின் அகரமிற்காக விஜய் ஒரு ப்ரோமோஷனல் வீடியோவில் நடித்து கொடுத்தார்.பல விருது விழாக்களில் இருவரும் அமர்ந்து ஜாலியாக பேசி மகிழ்ந்துள்ளனர்.

இப்படி இவர்கள் கலகலப்பாக இருந்த பல நேரங்கள் உள்ளன.இதனை அவ்வப்போது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.தற்போது தளபதி விஜய் மற்றும் சூர்யா இருவரின் பழைய வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.பெங்களூரில் ஒரு விழாவில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்