இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபீஸ் மன்னனாகவும் விளங்கும் தளபதி விஜய் அவர்கள் மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 திரைப்படத்தில் இணைகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட வாரிசு படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெறுகிறது.

தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் வாரிசு படத்தில், பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.
 
இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக தளபதி விஜய் விசாகபட்டினம் புறப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் புறப்பட்ட தளபதி விஜய் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…