தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது படங்கள் வெளியானாலே திரையரங்கங்கள் திருவிழாவாக காட்சியளிக்கும்.இவரது பிகில் படம் கடந்த 2019 தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி சமூகவலைத்தளங்களில் செம ஹிட் அடித்துள்ளது.இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கிறார் என்ற தகவல்கள் பரவி வந்தன ஆனால் சில காரணங்களால் இவர் இந்த படத்தை இயக்கமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.இவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்று பல கேள்விகள் சுற்றி வருகின்றன.இளம் இயக்குனர் நெல்சன் விஜயிடம் கதை சொல்லியுள்ளார் என்ற தகவலும் சமீபத்தில் கிடைத்தது.

தற்போது தளபதி விஜய் இயக்குனர் அட்லீயின் ஆஃபிஸில் இருந்து கிளம்புவது போல ஒரு வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது.இது அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தையா,சாதாரண சந்திப்பா அல்லது அட்லீயின் தயாரிப்பில் வெளியான அந்தகாரம் படத்தினை பாராட்ட விஜய் அட்லீயை சந்தித்தாரா போன்ற தகவல்கள் தெரியவில்லை.ஏற்கனவே தெறி,மெர்சல்,பிகில் என்று இந்த கூட்டணி மூன்று வெற்றி படங்களை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.