விழா மேடைகளும்..விஜயின் பேச்சுகளும்...குட்டி கதையின் தொடக்கமும்...தாக்கமும்...!
By Aravind Selvam | Galatta | April 19, 2020 14:14 PM IST

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த என்டர்டைனர்களில் ஒருவர்.தனது படத்தை பார்க்கவரும் ரசிகன் திருப்தியாக செல்லவேண்டும் என்பதற்காக டான்ஸ்,காமெடி என்று ஆல் ஏரியாவிலும் அடித்து நொறுக்கும் கில்லி.குறிப்பாக இவருக்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் ரசிகர் பட்டாளம் ஏராளம் அதனால் இவரது படங்கள் வந்தாலே திரையரங்குகள் குடும்பம் குடும்பமாக நிரம்பி திருவிழாவாக இருக்கும்.
இவரது பட ரிலீசுக்கு நிகராக இவரது இசை வெளியீட்டு விழாக்களுக்கும்,இவர் கலந்துகொள்ளும் விருது விழாக்களுக்கும் இருக்கும்.காரணம் இவரது பேச்சை கேட்க ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.தலைவா படம் வரை டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த விஜய் அதன் பின் எந்த டிவி நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டுமுறை மட்டுமே விழாக்களில் தோன்றிவந்தார் விஜய்.ஒவ்வொரு விழாவிலும் இவரது பேச்சுக்கு விசில் சத்தங்களும்,கைதட்டல்களும் பறந்தன.விஜயின் குட்டிக்கதைகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.இந்த குட்டிக்கதைகளின் தொடக்கம் எது தெரியுமா..வாங்க பார்க்கலாம்
2007 முதல் 2011 வரை விஜய்க்கு மிகவும் கடினமான வருடங்களாகவே இருந்தன சூப்பர்ஸ்டார் நாற்காலியை நோக்கி ஏறிக்கொண்டிருந்த விஜய் தொடர் தோல்விகளால் சரியத் தொடங்கினார்.இந்த நேரத்தில் மீண்டும் தனது ஃப்ரண்ட்ஸ் இயக்குனருடன் இணைந்து காவலன் என்ற வெற்றிப்படத்தை அளித்தார் விஜய்.ஏகப்பட்ட அரசியல் இடஞ்சல்களுக்கு நடுவே இந்த படம் வெளியானது.இதனை தொடர்ந்து வெளியான விஜயின் வேலாயுதம் தங்கை செண்டிமெண்ட்,ஆக்ஷன் என்று பக்கா விஜய் பார்முலா படமாக மக்களை கவர்ந்தது.இதனை தொடர்ந்து 2012-ல் இயக்குனர் ஷங்கருடன் முதல்முறையாக இணைந்தார் விஜய்.நண்பன் ஒரு ரீமேக் படமாக இருந்தாலும் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம் அவரை மீண்டும் சூப்பர்ஸ்டார் ரேஸில் அமர்த்தியது.
மீண்டும் ஃபார்முக்கு வந்த விஜய்க்கு 2013 மீண்டும் ஒரு அடியாக அமைந்தது.தலைவா டைம் டு லீட் என்ற தலைப்பில் இருந்தே தொடங்கியது தலைவலி.தமிழகத்தில் மட்டும் இந்த படம் 13 நாட்கள் தாமதமாக வெளியானது,திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்,தமிழகத்தில் வெளியாவதற்கு முன்பே திருட்டு விசிடி என்று இந்த படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது.இத்தனையும் சமாளித்து ஒருவழியாக இந்த படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து பிரபல வாரஇதழ் ஒன்று அடுத்த சூப்பர்ஸ்டார் என்று வாக்கெடுப்பு நடத்தி விஜய்க்கு மகுடம் சூட்டியது.
குட்டிக்கதையின் தொடக்கம் தலைவாவில் தான் , 2014 ஜூலையில் விஜய் டிவி தங்கள் 8ஆவது விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை நடத்தினர்.தலைவா படத்தின் ரிலீஸிற்கு பிறகு விஜய் பங்கேற்கும் ஒரு பெரிய விழா.விஜய்க்கு Favourite ஹீரோ விருது வழங்கப்பட்டது இது மக்களால் நேரடியாக ஓட்டளிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு விருது.வெற்றி தோல்வி சினிமால சகஜம் அதை மக்கள் தான் தீர்மானிக்கனும் சூழ்நிலை கிடையாது என்றும் ஜெயிச்ச படத்துக்கு நீங்க கூப்டிருந்தா கூட நான் வந்துருக்கமாட்டேன் ஜெயிக்கவேண்டிய படம்னு அங்கீகாரம் குடுத்த உங்களுக்கு நன்றி என்று சரவெடியாக ஆரம்பித்தது விஜயின் பேச்சு.
எனக்கு அடுத்த சூப்பர்ஸ்டாராலாம் இருக்க ஆசையில்லை எனக்குன்னு மக்கள் மனசுல ஒரு இடம் வேணும்னு தான் நெனச்சேன் என்று அதற்கும் விளக்கம் கொடுத்த விஜய்.குட்டிக்கதை ஒன்றை தொடங்கினார் தன்னை விட திறமையான நடிகர்கள் இங்க இருக்கிறார்கள் கோல் போடும் சந்தர்ப்பம் வரும்வேளையில் அவர்கள் அனைவரும் சூப்பர்ஸ்டார் தான்.கிரீடம் எவ்வளவு கனமாக இருந்தாலும் அதை தாங்கும் தலை கனமாக இருக்கக்கூடாது,வெற்றி தோல்விகள் வரும் ஆனால் முயற்சி தான் முக்கியம் என்று விஜய் முடிக்க அரங்கமே கைத்தட்டல்களால் அதிர்ந்தது.
இதனை தொடர்ந்து விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளிலெல்லாம் அவரது பேச்சுக்கு விசில் சத்தங்களும்,கைதட்டல்களும் விண்ணை பிளந்தன.அதுவரை மேடைகளில் அமைதியாக வந்து படத்தை பற்றி மட்டுமே பேசிவந்த விஜய் இங்குதான் வாழ்க்கை குறித்த தனது கருத்துக்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள தொடங்கினார்.குட்டிக்கதைகள் ஆரம்பமாக தொடங்கின.இதற்கு முன்னர் பல மேடைகளில் விஜய் பேசியிருந்தாலும் இதிலிருந்து தான் இவரது பேச்சுக்களை மக்கள் வெகுவாக ரசிக்கத்தொடங்கினர்.
இதற்கு அடுத்ததாக செப்டம்பரில் கத்தி படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது அந்த படத்தின் தயாரிப்பு நிர்வாணத்தை மீது பல எதிர்ப்புகள் இருந்தன.இந்த விழாவில் பேசிய விஜய் என்னை தியாகினு சொல்லிக்கமாட்டேன் அதே நேரம் நான் துரோகியும் கிடையாது,உண்மைக்கு விளக்கம் குடுத்த தெளிவாகும் அதுவே வதந்திக்கு விளக்கம் குடுத்த உண்மையாகிடும் என்று பஞ்ச்களோடு ஆரம்பித்த விஜய்.தனது குட்டிக்கதையை எடுத்துவிட்டார் ஒரு படத்தில் 50 வயசு வர வாழ்க்கை அப்டி இப்டி இருக்கும் அதுக்கப்பறம் அதுவே பழகிரும் என்று தனது வாழ்க்கையை கனெக்ட் செய்துகொண்டார்.இந்த விழாவிலும் விஜயின் பேச்சு பலரையும் ஈர்த்தது.
2015-ல் புலி படத்தின் இசை வெளியீட்டு விழா விஜய் தனது சீரியஸ் மோடில் இருந்து வெளிவந்து ரசிகர்களுடன் ஜாலியாக பேசத்தொடங்கியது இங்குதான்.எனக்கு உண்மையா ஒருத்தர வெறுக்க தெரியும் பொய்யா ஒருத்தர நேசிக்கவே தெரியாது,நமக்கு பின்னாடி பேசுறவங்கள பத்தி நம்ம கவலைப்பட கூடாது என்று தனது பேச்சை தொடங்கிய விஜய்.வெற்றிக்கு பின்னாடி ஒரு ஆணோ,,பெண்ணோ இருப்பாங்கன்னு சொல்லுவாங்க எனக்கு பின்னாடி நிறைய அவமானங்கள் தான் இருக்கு என்று ரசிகர்களுடன் தனது வாழ்க்கை நிகழ்வுகளை பகிர்ந்துகொண்ட விஜய்.தொடர்ந்து பில்கேட்ஸ் குறித்த ஒரு குட்டி கதையை தெரிவித்தார்.விளையாட்ட பாக்கவேண்டிய விஷயத்தை நாம சீரியசா பாக்குறோம்,சீரியசா பாக்க வேண்டிய விஷயத்தை விளையாட்ட கூட பார்க்கமாற்றோம் என்று விஜய் எம்.ஜி.ஆர் குறித்த குட்டிக்கதை ஒன்றை தெரிவித்தார்.எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்கள வாழவெச்சு அழகுபாக்குறது தான் பிடிக்கும் என்று சரவெடியாய் வெடித்தார் விஜய்.
விஜயின் ஆடியோ லான்ச்களுக்கான மவுசு மக்கள் மத்தியில் கூடத்தொடங்கியது.இவரது இசைவெளியீட்டு விழாக்களை ஒளிபரப்ப சேனல்கள் போட்டிபோட்டு கொண்டன.புலி படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்பதால் தனது தெறி படத்தின் இசைவெளியீட்டு விழாவை சத்யமில் சாந்தமாக நடத்த விஜய் முடிவெடுத்தார்.விஜய் பெரிதாக பேசவில்லை என்றாலும் தெறி இசைவிழாவில் இவரது பேச்சு வாட்ஸ்ஆப்பிலும்,பேஸ்புக்கிலும் வைரலாகின.மத்தவங்க தொட்ட உயரத்தை நீங்க இலக்கா வைக்காதிங்க நீங்க தொட்ட உயரத்தை மத்தவங்களுக்கு இலக்கா வைங்க என்று ரசிகர்களுக்கு பூஸ்ட் கொடுத்தார் விஜய்.தனது ரசிகர்களுக்காக ரஷ்யா அதிபர் குறித்த குட்டிக்கதையை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
பைரவா படத்திற்கு இசைவெளியீட்டு விழா நடைபெறவில்லை ,தொடர்ந்து மெர்சல் படத்தின் இசைவெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.விஜயின் 25ஆம் ஆண்டு,ஏ.ஆர்.ரஹ்மானின் 25ஆம் ஆண்டு என்று களைகட்டியது இசைவிழா.இந்த இசைவெளியீட்டு விழாவை லைவாக ஒளிபரப்பப்பட்டது.பல மேடைகளில் என் நெஞ்சில் குடியிருக்கும் என்று ஆரம்பிக்கும் விஜய் அதற்கு விடுமுறை அளித்து நண்பா,நண்பி என்று தனது பேச்சை தொடங்கினார்.Ignore Negativity என்ற விஜயின் தாரக மந்திரத்தை ரசிகர்களுக்கு தெரிவித்தார் இன்றும் பலர் இந்த வசனத்தை உபயோகிப்பதை நாம் பார்க்கமுடியும்.
எல்லாருக்குமே நம்மள புடிச்சுருச்சுன்னா லைப் போர் அடிச்சுறது என்று விஜய் பேச விஜய் ரசிகர்களை தாண்டி இந்த வசனம் அனைவரது போனிலும் ஸ்டேட்டஸாக இருந்தது.இந்த விழாவில் டாக்டர்.மெக்கானிக் குறித்த குட்டிக்கதையை கூறிய விஜய் நான் பேசுறதெல்லாம் பிடிச்சா எடுத்துக்கோங்க இல்லைனா விட்ருங்க,உங்ககிட்ட தான் இதெல்லாம் பேசமுடியும் என் பையன் கேக்கமாட்டான் என்று விஜய் கூற விஜய் இப்படி ஜாலியா பேசி பாத்ததே இல்லையே என்று பலரையும் ரசிக்கவைத்தது.
விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்று அனைவரும் பேசிக்கொண்டிருக்க அப்போது அவரது அடுத்த படத்தின் பெயரும் சர்கார் ஆக அமைந்தது.விஜயின் படங்களை தாண்டி விஜயின் இசை வெளியீட்டு விழாவிற்கு டிக்கெட் கிடைப்பதும் அபூர்வம் ஆகிவிட்டது.விஜய் பேசும் தருணம் வந்தது சில வருடங்களுக்கு பிறகு விஜய் தனது trademark ஸ்டைலில் என் நெஞ்சில் குடியிருக்கும் என்று ஆரம்பிக்க அரங்கமே ஆர்ப்பரித்தது.
உசுப்பேத்துறவங்கட்ட உம்முன்னு,கடுப்பேத்துறவங்கட்ட கம்முனு இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்னு அனல்பறக்க ஆரம்பிக்கும் விஜய் நெஜத்துல முதலமைச்சர் ஆனா நடிக்கமாட்டேனு சொல்ல அரங்கமே அதிர்ந்தது விஜய் உண்மையிலேயே அரசியலுக்கு வந்துவிடுவார்போல என்று பலரும் விஜயின் பேச்சுக்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர்.ஒரு அரசியல் குட்டிக்கதையும் விஜய் கூறுகிறார்.இப்படி விஜயின் பேச்சு அரசியலை சார்ந்து இருக்க அனைத்து நியூஸ் சேனல்களிலும் விவாதத்திற்கு உள்ளாக தொடங்கியது விஜயின் பேச்சு.
ஒவ்வொரு இசைவெளியீட்டு விழாவிற்கும் விஜயின் அந்த அமைதியான முகம் மறைந்து ரசிகர்களை பார்க்கும்போதெல்லாம் உற்சாகமாக ஒவ்வொரு இசை வெளியீட்டு விழாவிலும் எதாவது ஒன்று செய்யத்தொடங்கினார்.அடுத்ததாக கடந்த வருடம் நடைபெற்ற பிகில் இசைவெளியீட்டு விழா.மேடையேறிய விஜய் நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் என்று படத்தில் தான் பாடிய பாடலை பாட ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.எம்.ஜி.ஆர் குறித்த குட்டிக்கதையை கூறி யார் யார் கிட்ட என்ன வேலைய குடுக்கணுமோ அதை குடுங்க என்று மக்களிடம் கோரிக்கை வைத்தார்.ரசிகர்களுக்காகவும் விஜய் பேச விஜயின் இந்த ஜாலியான பேச்சும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த விழாவில் விஜய் பேசியதும் பல சேனல்களில் விவாதத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக சமீபத்தில் நடந்த மாஸ்டர் இசைவெளியீட்டு விழா பெரிய விழாவாக நடக்கவில்லை என்றாலும் ரசிகர்களுக்காக இந்த விழாவை நேரடியாக ஒளிபரப்பினர்.கடந்த விழாவில் பாட்டு பாடி ரசிகர்களை கவர்ந்த விஜய் இந்த முறை மேடை ஏறியதும் டான்ஸ் ஆட தொடங்கினார்.செம கூலாக தனது உரையை ஆரம்பித்த விஜய் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியாத ரசிகர்களுக்கு தனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார்.வழக்கம்போல ஒரு குட்டிக்கதை கூறிய விஜய் தனது வாழ்க்கையில் நடந்த ஐடி ரெய்டு,நெய்வேலி செல்பி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொண்ட விஜய்.அரசியல் பற்றி இந்த விழாவில் பேசாத விஜய் , தனது சக போட்டியாளரான அஜித்தை நண்பர் என்று கூற சமூகவலைத்தளங்கள்
பற்றி எரிந்தன.சிறியதாக நடந்த போதும் விஜயின் பேச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையாமலேயே இருந்தது.
விஜயின் திரைப்பட வசனங்களை தாண்டி அவரது இசைவெளியீட்டு விழா பேச்சுக்கள் பலரது வாழ்க்கையில் ஊக்குவிப்பதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.விஜய் ரசிகர்களை தாண்டி பலரும் இவரது பேச்சுக்களை ரசிக்கத்தொடங்கினர்.இந்த பேச்சாளர் விஜய் உருவெடுக்கத்தொடங்கியது 2014 விஜய் அவார்ட்ஸில் இருந்து தான்.இன்னும் அவர் பல படங்களில் நடித்து அவர் நடிப்பாலும்,நடனத்தாலும்,இசை வெளியீட்டு விழாக்களில் தனது பேச்சாலும் நம்மை ஈர்ப்பார் என்பது நிச்சயம்.நாம் சோகம இருக்கும் நேரங்களில்,பல அவமானங்களை சந்திக்கும் வேளைகளில் நமக்கு தன்னம்பிக்கை ஏற்றும் விதமாக ஒன்று இருக்குமாயின் அதில் நிச்சயம் விஜயின் இந்த பேச்சுகளும் இருக்கும் இனி வரப்போகும் விழாக்களின் பேச்சுகளும் இருக்கும் என்பது தான் உண்மை.
Boney Kapoor's latest statement on Ajith's Valimai - good news for Thala fans!
23/06/2020 01:11 PM
107-year old veteran South Indian actor passes away
23/06/2020 12:25 PM
Popular actress shares her WhatsApp conversation with Sushant Singh Rajput!
23/06/2020 12:00 PM