தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருந்த தளபதி விஜய்யின் பிட்டு திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான பீஸ்ட் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் எழுதி இயக்கியிருந்தார்.

தளபதி விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க,  செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, யோகிபாபு, அபர்ணா தாஸ், சதீஷ் கிருஷ்ணன், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் R.நிர்மல் படத்தொகுப்பு செய்துள்ள பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளிவந்த அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் ரிலீசுக்கு முன்பே வேற லெவல் ட்ரெண்டடித்தது. முன்னதாக பீஸ்ட் திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு மற்றொரு பிரம்மாண்ட திரைப்படத்துடன் ஒப்பிட்டுப் பீஸ்ட் படத்தின் மீது பல கலவையான விமர்சனங்கள் ஆரம்பத்தில் இருந்தாலும் தற்போது அவை அனைத்தையும் பொய்யாக்கி பீஸ்ட் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய் அவர்கள் பீஸ்ட் திரைப்படத்தின் படக்குழுவினர் அனைவரையும் அழைத்து ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்து பீஸ்ட் படத்தின் வெற்றியை மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய் உடன் படகுழுவினர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தளபதி விஜயின் ஸ்பெஷல்ட்ரீடட் குறித்து பதிவிட்டுள்ளார். வைரலாகும்  அந்த புகைப்படமும் பதிவும் இதோ…