தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள இவர் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் சில நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது.

இந்த படத்தின் ரிலீஸிற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா நேரத்தில் நண்பர்களுடன் வீடியோகால்,மகேஷ் பாபுவின் சவாலை ஏற்றது என்று ஒரு சில முறை தளபதியின் புகைப்படங்கள் வெளியாகி தாறுமாறாக ட்ரெண்ட் அடித்தன.விஜய்க்கு ஒரு மகன் இருப்பதும் அவர் கனடாவில் சினிமா சார்ந்த படிப்பை படித்து வருவதும் அனைவரும் அறிந்ததே.லாக்டவுன் நேரத்தில் கன்னடாவில் இருந்த அவர் சில மாதங்களுக்கு பிறகு சென்னை திரும்பினார்.

தந்தையுடன் சில விழாக்களில் மட்டும் கலந்துகொண்டு வந்தார் சஞ்சய்.வேட்டைக்காரன் படத்தில் விஜயுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார் சஞ்சய்.இவர் தனது நண்பர்களுடன் இணைந்து எடுத்த ஷார்ட்பிலிம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது சஞ்சய் ரஹ்மானின் மகனான ஏ.ஆர்.அமீனுடன் வீடியோகாலில் உரையாடுவது போல ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.இது புதிய புகைப்படமா,பழைய புகைப்படமா என்று தெரியாததால் ரசிகர்கள் சிலர் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர் என்றாலும் இளையதளபதியையும் இளைய ரஹ்மானையும் ஒன்றாக பார்த்ததில் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.