தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும் முன்னணி உச்ச நட்சத்திரமாகவும் திகழ்கிறார் தளபதி விஜய். கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தளபதி விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் வேட்டைக்காரன் திரைப்படத்திலும் மகள் திவ்யா சாஷா தெறி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலும் நடித்திருந்தனர். 

தற்போது வெளிநாட்டில் கல்லூரி படிப்பை தொடர்ந்து வரும் ஜேசன்  சஞ்சய் விரைவில் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என்று சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தன. ஆனால் இதுகுறித்து தளபதி  விஜய் தரப்பு மறுத்தது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா இருவரும்  எந்த ஒரு சமூக ஊடகங்களிலும் தொடர்பில் இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

முன்னதாக தமிழ் திரையுலகில் பல பிரபலங்களின் பெயரில் போலி ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் துவங்கப்பட்டு வருவது தினசரி செய்தியாக நாம் பார்க்கிறோம். அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி உச்ச நட்சத்திரமான தளபதி விஜயின் மகன் மற்றும் மகளின் பெயரில் சமூக வலைதளங்களில் பக்கங்கள் துவங்கப்பட்டு இருப்பதை அறிந்து தற்போது தளபதி விஜய் தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில் ஜேசன் சஞ்சய்  திவ்யா சாஷா இருவரும்  ட்விட்டரில் இல்லை என்ற தகவல் தற்போது  அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது. 

அடுத்ததாக தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார் தளபதி 65 என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் பிரபல தென்னிந்திய நடிகையான பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க தமிழகத்தின் ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் தளபதி 65 படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.