தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் உயர்ந்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.அதிக ரசிகர்களை கொண்டுள்ள சில தமிழ் நடிகர்களில் ஒருவராக தளபதி விஜய் இருக்கிறார்.இவரது படங்கள் ரிலீஸ் ஆனாலே திரையரங்குகள் திருவிழா கோலம் கொண்டு இருக்கும்.இவரது மாஸ்டர் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது

அடுத்ததாக இவர் நடித்துள்ள பீஸ்ட் படம் விரைவில் வெளியாகவுள்ளது,இதனை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார்.திரைப்படங்களை தாண்டி பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை தளபதி விஜய் அவ்வப்போது செய்து வருவார்.அவரைப்போலவே இவரது ரசிகர்களும் தங்கள் விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தனர்.

கொரோனா நிவாரணம்,வெள்ள நிவாரணம் என அனைத்திலும் தங்கள் பங்கினை ஆற்ற விஜய் மக்கள் இயக்கம் தவறியதில்லை.சமீபத்தில் முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்ததாக தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுகின்றனர்.

பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த தேர்தலிளுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தேர்தலில் தனது புகைப்படம் மற்றும் கொடியை பயன்படுத்த விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அனுமதி அளித்துள்ளார்.

பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள விஜய் குறித்து ஒரு சிறிய புகைப்படம்,வீடியோ என எது வந்தாலும் வைரலாகி விடும்.கடந்த வருடமும் தோனி,யுவன் உள்ளிட்டோருடன் இவரது சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் Favourite ஆக இருந்தன.

தற்போது பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி விஜயை அவரது இல்லத்தில் சந்தித்து நேற்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசியுள்ளார்.இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்.இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றன.