இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா & டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது பீஸ்ட் திரைப்படம்.

பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, யோகிபாபு, அபர்ணா தாஸ், VTV கணேஷ் ஆகியோருடன் இணைந்து மிரட்டலான வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடித்து வருகிறார். 

தளபதியின் மாஸ்டர் மற்றும் நெல்சனின் டாக்டர் படங்களுக்கு இசையமைத்த ராக்ஸ்டார் அனிருத் பீஸ்ட் படத்திற்கும் இசையமைக்கிறார்.ப்ளாக் காமெடி - ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஸ்டன்ட் இயக்குனர்களாக அன்பறிவு பணியாற்றி வருகின்றனர். 

100 நாட்களை கடந்து பல கட்டங்களாக நடைபெற்று வரும் படப்பிடிப்பில் 80 % மேல் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ள நடிகர் ரெட்டின் கிங்ஸ்லீ மற்றும் நடிகை அபர்ணா தாஸ் ஆகியோர் பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புதிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.அந்த புகைப்படம் இதோ...