தொலைக்காட்சியில் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் ஆரி அர்ஜுனன் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து விட்டார் ஆரி. பிக்பாஸ் ரசிகர்கள் சிலர் இவர்தான் டைட்டில் வின்னர் என்றும் கூறிவருகின்றனர் . சமீபத்தில் நடிகர் ஆரி நடிப்பில் தயாராகியுள்ள பகவான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிக் பாஸ் வீட்டில் வெளியிட்டார்.

முன்னாள் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா மற்றும் இந்நாள் பிக்பாஸ் புகழ் ஆரி இருவரும் இணைந்து நடித்துள்ள படம் அலேகா. இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் தற்போது  அலேகா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. ட்ரெய்லரின் முதல் பாதியில் ஆரி-ஐஸ்வர்யா இடையேயான காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இரண்டாம் பகுதியில் குழந்தையைத் தேடும் தம்பதியராக ஆரி- ஐஸ்வர்யா வருவது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஆரி தன்னுடைய பெயரை ஜோசப் விஜய் எனக் கூறுவது போன்று ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் காட்சி மட்டும் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
அந்த ட்ரெய்லரை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்துள்ளனர். 

ட்ரைலரில் ஆரி தன் பெயர் ஜோசப் விஜய் என்று சொன்ன விதமும் தளபதி போன்றே இருந்ததாம். இயக்குனர் AR முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தில் தளபதி விஜய்யை காவல் நிலையத்தில் வைத்திருப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சியின் பிரதிபலிப்பு போல் இருந்தது என ஆரியை பாராட்டி கமெண்டு செய்து வருகின்றனர் தளபதி ரசிகர்கள். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் ஆரி நடித்துள்ள பகவான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இருந்தது. பிக்பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்கள் முன்பும் வெளியிடப்பட்டிருந்தது.