ஊரடங்கு நேரத்தில் பல குறும்படங்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கௌதம் மேனன் இயக்கத்தில் STR மற்றும் த்ரிஷா நடித்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து ஒரு சான்ஸ் குடு பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 

Thalapathy Vijay Message To Shanthnu About Oru Chance Kudu Song

ஒன்றாக என்டர்டெயின்மென்ட் தயாரித்த இந்த பாடலில் ஷாந்தனு பாக்கியராஜ், கலையரசன் மற்றும் மேகா ஆகாஷ் நடித்திருந்தனர். கார்த்திக் குரலில் ஒலிக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார். நடன அமைப்பாளர் சதிஷ் கிருஷ்ணன் இந்த பாடலுக்கு கோரியோகிராஃப் செய்திருந்தார். ரசிகர்களை தாண்டி திரைப்பிரபலங்களையும் ஈர்த்தது இந்த பாடல்.

Thalapathy Vijay Message To Shanthnu About Oru Chance Kudu Song

தற்போது இந்த பாடலை பார்த்து விட்டு ஷாந்தனுவுக்கு மெசேஜ் செய்துள்ளாராம் தளபதி விஜய். பாடல் நன்றாக உள்ளது. தளபதியிடமிருந்து வரும் வாழ்த்து ஸ்பெஷல் தானே. ஏற்கனவே ஷாந்தனு நடித்த  கொஞ்சம் கொரோனா நிறைய காதல் குறும்படத்தை தளபதி விஜய் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.