மக்களால் மிகவும் விரும்பப்பட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் VJ ரம்யாவும் ஒருவர். சினிமாவில் இரண்டாம் கட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரம்யாவுக்கு அடுத்து ஒரு ஹீரோயின் சான்ஸ் கிடைத்தது. இவர் நடிப்பில் வெளிவந்த ஓகே கண்மணி, ஆடை, கேம் ஓவர் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. 

எப்போதும் போட்டோஷூட்கள், உடற்பயிற்சி வீடியோக்கள் என சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார் ரம்யா. சென்ற லாக்டவுனில் ரசிகர்களுடன் லைவ்வில் பேசியும்,அவர்களுக்கு உடற்பயிற்சி குறித்தும் இவர் தனது சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வந்தார். உடற்பயிற்சி குறித்தும்,மேக்கப் குறித்தும் அவ்வப்போது விடீயோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி வருவார் ரம்யா.

இந்நிலையில் மாஸ்டர் படக்குழு ரம்யாவுக்கு இன்பதிர்ச்சி தந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தளபதி விஜய்யின் உருவ சிலையை ரம்யாவுக்கு பரிசளித்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மக்களின் அபிமானம் பெற்ற தலைவர்களுக்கு சிலை வைப்பது வழக்கம். முதல் முறையாக ஒரு நடிகருக்கு, அதுவும் இன்னும் நடித்துக்கொண்டிருக்கும் நடிகருக்கு சிலை என்பது சாதனை தான். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து பொங்கல் தினத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் ரம்யா கல்லூரி ஆசிரியராக நடித்துள்ளார். ரம்யாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும் இந்த மாஸ்டர். 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்துக்கு U/A சான்றிதழ் என்பதைப் படக்குழு அறிவித்திருந்தது. 

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் படத்தின் புதிய ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது.