தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

இந்த படத்தை  Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் சமீபத்தில் மீண்டும் உறுதி செய்தனர்.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து , படத்திற்கு யூ/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.

இந்த படத்தின் சென்சார் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன,அதில் படம் 178 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 58 நிமிடம் நீளம் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.பொங்கலுக்கு 3 மணி நேர கொண்டாட்டமாக மாஸ்டர் படம் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.