எங்களுக்கும் வருத்தம் தான் - மாஸ்டர் ரிலீஸ் குறித்து படக்குழு பதிவு !
By Aravind Selvam | Galatta | April 09, 2020 14:20 PM IST

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.
இந்த படத்தை ஏப்ரல் 9ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.இந்தியா முழுவதும் அதிகரித்துவரும் கொரோனாவின் தாக்கத்தால் ஏப்ரல் 14 வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
இன்று இந்த படம் வெளியாகியிருக்கும் என்று பல ரசிகர்களும் தங்கள் வருத்தங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.இதனை கவனித்த படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டருடன் வந்து ரசிகர்களுக்கு நம்பிக்கை தந்துள்ளனர்.படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது உங்களை போல எங்களுக்கும் வருத்தம் தான் ஆனால் முதலில் நாம் அனைவரும் ஒற்றுமையாக கொரோனாவை கடந்து பின்னர் நமது மாஸ்ட்டரை கொண்டாடலாம் என்று பதிவிட்டுள்ளனர்.
We miss you, just like how you miss us!
— XB Film Creators (@XBFilmCreators) April 9, 2020
Hoping that a master-mind finds an antidote and put an end to Corona!
We'll come back stronger nanbaa.
Stay home, Stay Safe. #Master #StaySafe pic.twitter.com/MouTeUqlGn
We as well go through the same emotion, missing #Master on big screen. The excitement and celebrations of FDFS aren’t shattered, it is just delayed. We all shall stay safe and celebrate our ‘Mass’ter soon. #DontWorryMapi #StaySafe pic.twitter.com/sTIMMwEE51
— Jagadish (@Jagadishbliss) April 9, 2020
Survival first! Celebration next!#master will rise on the right time!
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 9, 2020
stay home stay safe! pic.twitter.com/g9CeHfHQcT
Respect: Yogi Babu donates 1250 KGs of rice to members of Nadigar Sangam!
09/04/2020 01:33 PM
Harish Kalyan tells fans that he has a crush on Rashmika Mandanna! Check Out!
09/04/2020 12:48 PM
Popular American actor dies of COVID-19
09/04/2020 04:19 AM