லியோ முதல் விடாமுயற்சி வரை.. ஜூன் மாதம் களைகட்டும் முக்கிய திரைப்படங்களின் அப்டேட்டுகள்.. – முழு பட்டியல் இதோ..

ஜூன் மாதம் வெளியாகும் முக்கிய திரைப்படங்களின் அப்டேடுகள் பட்டியல் உள்ளே – June month updates from kollywood | Galatta

ஓராண்டில் அரையாண்டு முடிவில் கோலிவுட் திரையுலகில் பல முக்கிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் சாதனை படைத்துள்ளது. தளபதி விஜயின் வாரிசு முதல் அஜித் குமார் அவர்களின் துணிவு, மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் என்று இந்த ஆண்டின் முதல் பாதி மிகப்பெரிய கொண்டாட்டங்களை  கோலிவுட் திரையுலகம் ரசிகர்களுக்கு கொடுத்தது. அதை தொடர்ந்து வரவிருக்கும் மாதங்களில் தளபதி விஜயின் லியோ, சிவகார்த்திகேயனின் மாவீரன், அயலான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர், தனுஷின் கேப்டன் மில்லர், சியான் விக்ரமின் தங்கலான் என்று பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அப்படங்களின் தொடக்கமாக இந்த ஜூன் மாதம் இருந்து வருகிறது.  அதன்படி இந்த ஜூன் மாதங்களில் வரவிருக்கும் முக்கிய திரைப்படங்களின் அப்டேட் குறித்த சிறப்பு தொகுப்பு இதோ..

மாமன்னன்

உதயநிதி நடிப்பில் ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’ ஜூன் 29 ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகவுள்ளது. குறிப்பாக இப்படத்தின் டிரைலர் ஓரிரு வாரங்கள் வெளியாகவுள்ளது.  

thalapathy vijay bigil fame indhiraja shankar getting married here is groom details

மாவீரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் ஜூலை 14ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் மாவீரன். வெளியாக ஒரு மாதமே உள்ள நிலையில் மாவீரன் திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் அல்லது டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

thalapathy vijay bigil fame indhiraja shankar getting married here is groom details

அயலான்

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தையடுத்து இந்த ஆண்டு வெளியாகவுள்ள திரைப்படம் ‘அயலான்’ பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கும் இப்படத்தின் அப்டேட் இந்த மாதம் இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் அது படத்தின் இரண்டாவது பாடலாக இருக்க வாய்ப்பு.

thalapathy vijay bigil fame indhiraja shankar getting married here is groom details

துருவ நட்சத்திரம்

சியான் விக்ரம் நடித்து நீண்ட நாட்களாகவே வெளியீட்டிற்கு காத்திருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிகட்ட வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவுள்ளது.

thalapathy vijay bigil fame indhiraja shankar getting married here is groom details

கிங் ஆப் கோதா

துல்கர் சல்மான் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள கிங் ஆப் கோதா திரைப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. விரைவில் படக்குழுவினரிடமிருந்து அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

thalapathy vijay bigil fame indhiraja shankar getting married here is groom details

கேப்டன் மில்லர்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் மிரட்டலான லுக்கில் நடித்து வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’ இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ளது. தனுஷ் அவர்களின் பிறந்தநாள் ஜூலை மாதத்தில் வரவிருப்பதால் முன்னதாக தயாரிப்பாளர் கேப்டன் மில்லர் படத்தின் முதல் பார்வை ஜூன் மாதத்திலும் டைட்டில் டீசர் தனுஷ் பிறந்தநாள் அன்றும் வெளியிடுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

thalapathy vijay bigil fame indhiraja shankar getting married here is groom details

தங்கலான்

சியான் விக்ரம் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படம் விக்ரம் உடல்நிலை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது விக்ரம் உடல்நிலை தேறியதால் தங்கலான் திரைப்படத்தின் இறுதிகட்ட காட்சிகளை வரும் ஜூன் 15ம் தேதி துவங்கவிருக்கின்றனர். 12 நாள் படப்பிடிப்பு மட்டுமே உள்ளதாக இயக்குனர் பா ரஞ்சித் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

thalapathy vijay bigil fame indhiraja shankar getting married here is groom details

லியோ

தளபதி விஜயின் 49 வது பிறந்தநாள் வரும் ஜூன் மாதம் 22 ம் தேதி கொண்டாடப் படுகிறது. கொண்டாட்டத்திற்கான முழு வீச்சில் ஏற்பாடுகளை தளபதி ரசிகர்கள் செய்து வருகின்றனர். மேலும் இந்த கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக மாற்றும் அளவு தளபதி விஜய் தற்போது நடித்து நடித்து வரும் லியோ படத்திலிருந்து  முதல் பார்வை, அல்லது டீசர் போன்ற அப்டேட்டுகள் வர வாய்ப்பு உள்ளது.  

thalapathy vijay bigil fame indhiraja shankar getting married here is groom details

தளபதி 68

தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தளபதியின் பிறந்தநாள் சார்ந்து ‘தளபதி 68’ படக்குழுவினர் சிறப்பு அப்டேட் விட வாய்ப்பு உள்ளது.

thalapathy vijay bigil fame indhiraja shankar getting married here is groom details

ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது வரும் ஆகஸ்ட் 10 வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாடல் அனிருத் இசையில் இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

thalapathy vijay bigil fame indhiraja shankar getting married here is groom details

விடாமுயற்சி

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் அவர்கள் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

thalapathy vijay bigil fame indhiraja shankar getting married here is groom details

விருதுகளை குவிக்கும் சாந்தனுவின் ‘இராவண கோட்டம்’.. சிறந்த இயக்குனர் விருதினை வென்ற விக்ரம் சுகுமாரன் – உற்சாகத்தில் படக்குழுவினர்.. வைரல் பதிவு உள்ளே..
சினிமா

விருதுகளை குவிக்கும் சாந்தனுவின் ‘இராவண கோட்டம்’.. சிறந்த இயக்குனர் விருதினை வென்ற விக்ரம் சுகுமாரன் – உற்சாகத்தில் படக்குழுவினர்.. வைரல் பதிவு உள்ளே..

சூப்பர் ஹீரோவாக திரையரங்குகளில் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி.. – ‘வீரன்’ படத்தின் கலகலப்பான காட்சியை வெளியிட்ட படக்குழு.. வைரல் வீடியோ
சினிமா

சூப்பர் ஹீரோவாக திரையரங்குகளில் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி.. – ‘வீரன்’ படத்தின் கலகலப்பான காட்சியை வெளியிட்ட படக்குழு.. வைரல் வீடியோ

 “என்கிட்ட சொந்த வீடு கிடையாது.. நிலம் கிடையாது..” உண்மையை உடைத்த சித்தார்த் – சுவாரஸ்யமான Exclusive Interview இதோ..
சினிமா

“என்கிட்ட சொந்த வீடு கிடையாது.. நிலம் கிடையாது..” உண்மையை உடைத்த சித்தார்த் – சுவாரஸ்யமான Exclusive Interview இதோ..