தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் கதாநாயகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களையும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் திரையரங்குகளில் பார்த்து ரசிப்பது வழக்கம். அதிலும் இந்த முறை நீண்ட இடைவெளிக்கு பிறகு முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகி இருக்கிறது தளபதி விஜயின் வாரிசு.

முதல்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தளபதி விஜயின் பக்கா மாஸ் விஷயங்களையும் ஃபேமிலி என்டர்டென்ரையும் சரியாக இணைத்துள்ள வாரிசு திரைப்படம் இன்று ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியிருக்கிறது.

ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தளபதி விஜயின் வாரிசு மற்றும் அஜித்குமாரின் துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் வெளியீடாக தற்போது ரிலீசாகி இருக்கும் நிலையில், இரண்டு படங்களுக்குமே நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. முன்னதாக வாரிசு படக்குழுவினர் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களோடு இணைந்து வாரிசு படத்தின் முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசித்தனர்.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பு, அவர்களது ஆரவாரம் மற்றும் படக்குழுவினர் மீது ரசிகர்கள் பொழிந்த பேரன்பின் காரணமாகவும் வாரிசு படத்தை ரசிகர்கள் கொண்டாடியதையும் கண்டு எமோஷ்னலான இசையமைப்பாளர் தமன் மற்றும் இயக்குனர் வம்சி ஆகியோர் நெகிழ்ச்சியில் கண் கலங்கினர். மேலும் தயாரிப்பாளர் தில் ராஜு உட்பட படக்குழுவினர் அனைவரும் நெகழ்ச்சியோடு தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். ரசிகர்களின் அன்பில் நெகழ்ச்சியடைந்து வாரிசு படக்குழுவினர் கண் கலங்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோ இதோ…
 

It’s always special seeing your film getting celebrated by the fans at “Mecca of celebrations” #FansFortRohini

Team #Varisu @MusicThaman @directorvamshi @DilRajuOff_ witnessing the mass of #Thalapathy at #VarisuFDFS 🔥🔥 #Varisu #PongalThiruvizhaAtRohini pic.twitter.com/LDMox8iavN

— Rohini SilverScreens (@RohiniSilverScr) January 11, 2023