தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய திரை உலகில் பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். முன்னதாக வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-தளபதி விஜய் ஜோடி தளபதி 67 படத்தில் இணையவுள்ளது.

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்புகள் வருகிற டிசம்பர் மாதம் முதல் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு.

தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக வாரிசு திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் குழந்தை ஒன்றை தனது மடியில் வைத்தபடி தளபதி விஜய் அமர்ந்திருக்கும் க்யூட்டான புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…
 

Cuteness overloaded ! 😍@actorvijay @Jagadishbliss @BussyAnand #VarisuPongal2023 #Varisu #ThalapathyVijay𓃵 #Thalapathy #Vijay pic.twitter.com/Ov8VItZsvL

— Galatta Media (@galattadotcom) October 31, 2022