குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடும் நட்சத்திர கதாநாயகனாக தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வருபவர் தளபதி விஜய். அந்த வகையில் அடுத்ததாக அதிரடி ஆக்சன் திரைப்படமாக மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்தின் தற்போது விஜய் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில் வாரிசு திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது முன்னதாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் முதல் முறையாக இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தில் ராஜு அவர்கள் தயாரித்துள்ளார்.

வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைத்துள்ளார்.

நாளை ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வாரிசு திரைப்படம் ரிலீஸாகிறது. இதற்கான டிக்கெடுகள் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கேரளாவில் வழக்கமாக தளபதி விஜயின் படங்களை கொண்டாடுவது போலவே இந்த முறை வாரிசு திரைப்படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 

குறிப்பாக கேரளாவில் 400+ ஸ்க்ரீன்களில் அதிகாலை 4மணி ரசிகர் மன்ற காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியிருப்பதாக தற்போது கேரளாவில் வெளியாகியிருக்கும் செய்தித்தாள் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 643 திரையங்குகள் கொண்ட கேரளாவில் 400க்கும் மேற்பட்ட திரையங்குகளில் வாரிசு திரைப்படம் ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
thalapathy vijay in varisu movie got mass opening in kerala