கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. இதனையடுத்து தளபதி விஜய்-ஐ இயக்கும் வாய்ப்பை பெற்ற இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, இயக்குனர் செல்வராகவன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டாம் ஷைன் சாக்கோ, யோகிபாபு, அபர்ணா தாஸ், சதீஷ் கிருஷ்ணன், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ள பீஸ்ட் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளிவந்த பிஸ்ட் திரைப்படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ஏகோபித்த வரவேற்பை பெற்று ட்ரெண்டாகி வருகின்றன. 

அடுத்ததாக பீஸட் திரைப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்திலிருந்து தளபதி விஜய்யின் புதிய புகைப்படத்தை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் அந்த புகைப்படம் இதோ…