தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜயின் அடுத்த திரைப்படமாக ரிலீஸாகவுள்ளது பீஸ்ட் திரைப்படம். சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க,  செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, யோகிபாபு, அபர்ணா தாஸ், சதீஷ் கிருஷ்ணன், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் R.நிர்மல் படத்தொகுப்பு செய்துள்ள பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

வருகிற ஏப்ரல் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள பீஸ்ட் படத்திலிருந்து முதல் பாடலாக அரபிக் குத்து பாடல் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியானது. “ஹலமித்தி ஹபி போ” என தொடங்கும் இந்த வைரல் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியான நாளிலிருந்து இன்று வரை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் அனைத்து இசை தளங்களிலும் ட்ரெண்டிங்கில் முன்னிலை வகித்து வரும் அரபிக் குத்து பாடல் உலக அளவில் ட்ரெண்டாகியுள்ள முதல் 200 பாடல்களின் பட்டியலிலும முன்னிலை இடத்தை பிடித்தது.

தொடர்ந்து யூடியூபிலும் பலகோடி பார்வையாளர்களை கவர்ந்து வரும் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் வெறும் 12 நாட்களில் யூடியூபில் 100 மில்லியன் (10 கோடி) பார்வையாளர்களை கடந்து இப்போது வேற லெவல் சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து ஹிட்டடித்து வரும் தளபதி விஜயின் அரபிக் குத்து பாடல் இதோ...