குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் சிறந்த நடிகராகவும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் விளங்கும் நடிகர் தளபதி விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, யோகிபாபு, டாம் ஷைன் சாக்கோ, ஜான் விஜய், VTV கணேஷ், அபர்ணா தாஸ் ஆகியோருடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக தளபதி விஜய் ஒழுங்கு இயக்குனரான வம்சி இயக்கத்தில் வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தளபதி 66 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தின் அவரை நேரில் சந்தித்தார் தளபதி விஜய்.

 இந்த சந்திப்பின்போது வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினரிடம், "இது "பதவி"அல்ல "பொறுப்பு" என்பதை உணர்ந்து பொதுவாழ்வில் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்" என
 தளபதி விஜய் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் வெற்றி பெற்ற போட்டியாளரோடு தளபதி விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது வெளியானது. அந்த புகைப்படம் இதோ...