கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் தினமும் அதிகரித்து வருகிறது.இதனை அடுத்து நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு மக்கள் பத்திரமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இருந்தாலும் நோயின் தாக்கம் குறைந்ததாக இல்லை.உலகத்தையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் எப்போது குறையும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன.சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன.சினிமா,சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.சில இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டன,ஷூட்டிங்குகள் ஆரம்பித்தன.

மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதாலும்,ஷூட்டிங்குகள் நடைபெறாததாலும் ஹிட்டான தொடர்களையும்,படங்களையும் டிவி சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பி வருகின்றனர்.தற்போது ஒளிபரப்பாகி வந்த விறுவிறுப்பான தொடர்களையும் முதலில் இருந்து ஒளிபரப்பி வருகின்றனர்.பலரும் இந்த தொடர்களையும்,நிகழ்ச்சிகளையும்,படங்களையும் பார்த்து வருகின்றனர்.

அதிகம் மக்களால் பார்க்கப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களின் லிஸ்டை BARC நிறுவனம் வாராவாரம் வெளியிட்டு வந்தனர்.தற்போது ரசிகர் ஒருவர் லாக்டவுன் நேரத்தில் அதிகம் ஒளிபரப்பட்டது தளபதி விஜயின் படங்கள் தான் என்று ஒரு டேட்டா ரெடி செய்துள்ளார்.நாள்வாரியாக எந்த படம் எப்போது எந்த சேனலில் ஒளிபரப்பானது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுவரை நேற்று ஒளிபரப்பட்ட பிகில் படத்தையும் சேர்த்து விஜயின் 59 படங்கள் 170 முறை ஒளிபரப்பப்பட்டுள்ளன.இவரது குருவி,ஒன்ஸ் மோர்,என்றென்றும் காதல் மற்றும் சந்திரலேகா படங்கள் ஒளிபரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த லாக்டவுன் நேரத்தில் இந்த சாதனையை தளபதி விஜய் செய்ததை அடுத்து அவரது ரசிகர்கள் இதனை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.