தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது படங்கள் வெளியானாலே திரையரங்கங்கள் திருவிழாவாக காட்சியளிக்கும்.இவரது பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.

இதனை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தயாராகி வரும் வாரிசு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இதனை தொடர்ந்து சில முன்னணி இயக்குனர்களுடன் விஜய் இணையவுள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.சமூகவலைத்தளங்களில் பெரிதாக ஆக்டிவ் ஆக இல்லாதவர் விஜய்,இருந்தாலும் இவரது சமூகவலைத்தள பக்கங்களில் இருந்து வரும் போஸ்ட்கள் லைக்குகளை அள்ளும்.

தற்போது ட்விட்டரில் விஜய் 4 மில்லியன் ரசிகர்களை பெற்று அதிக ரசிகர்களை கொண்ட தமிழ் நடிகர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில உள்ளார்.இந்த சாதனையை தளபதி விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.