கோடையின் பெரிய திருவிழாக்களில் ஒன்று ஐபிஎல் தொடர்.தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக,இந்த தொடர் நடக்குமா இல்லையா என்ற பல போராட்டங்கள் வந்து சென்றன.முக்கிய ஸ்பான்சர்களில் மாற்றம் என்று ஏகப்பட்ட பிரச்சனைகளை இந்த வருட ஐபிஎல் தொடர் சந்தித்துள்ளது.ஒருவழியாக இந்த தொடர் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போனது.

12 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 13ஆவது சீசன் இன்று UAE-யில் தொடங்குகிறது.முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.இருபெரும் அணிகள் மோதும் இந்த போட்டியை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தின் ஆஸ்தான அணியான சென்னைக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏராளமான ஆதரவு உள்ளது அதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி.கடந்த உலகக்கோப்பை 2019 அரையிறுதி ஆட்டத்திற்கு பிறகு , தற்போது தான் தோனி களத்தில் இறங்கப்போகிறார் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.கடந்த முறை நூலிழையில் கோப்பையை கோட்டைவிட்ட சென்னை அணி இந்த முறை நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

சென்னை அணிக்கு பல பிரபலங்களும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.சென்னையின் பிராண்ட் தூதராக 2008-ல் தளபதி விஜய் இருந்தார்.அந்த சீசனில் சில மேட்ச்களை நேரில் வந்தும் விஜய் பார்த்திருந்தார்.அப்படி ஒரு மேட்ச் பார்த்துக்கொண்டிருந்த விஜய்,சென்னை வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விசில் அடித்து , ஆடி பாடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்