நடிகர் விஜய் திமுகவுடன் தாராளமாக சேர்ந்துகொள்ளட்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிச்சயதார்த்த விழா ஒன்றில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், நடிகர் விஜயும் எதிர்பாராத விதமாகச் சந்தித்துக்கொண்டனர். அப்போது, ஒருவரை ஒருவர் சந்தித்து கை குலுக்கிக்கொண்டு, நலம் விசாரித்துக்கொண்டனர். இதனையடுத்து, இருவரும் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

Jayakumar

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்ப்புகள் உள்ள நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதால், நடிகர் விஜய்யைச் சந்தித்து திமுக பேசியுள்ளது என்று குறிப்பிட்டார்.

Mks Vijay

மேலும் நடிகர் விஜய், திமுகவுடன் தாராளமாகச் சேர்ந்துகொள்ளட்டும் என்றும், திமுகவில் யாரைச் சேர்த்தாலும் கவலை இல்லை என்றும் கூறினார். குறிப்பாக திமுக யாரைப் போய் பார்க்க வேண்டுமோ, பார்க்கட்டும். அமெரிக்க, ரஷ்ய அதிபர்களை திமுக சந்தித்தாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாகப் பேசினார்.