தமிழ் சினிமாவில் பெரிதும் கொண்டாடப்படும் நடிகர்களில் முக்கியமான ஒருவர் தளபதி விஜய்.தனது 65-ஆவது படத்தில் நடித்து வரும் இவர் 20 வருடங்களுக்கும் மேலாக தன்னுடைய விடாமுயற்சியால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தார் விஜய்.

கொரோனாவின் முதல் அலை குறைந்து இவரது மாஸ்டர் படம் வெளியானது , கொரோனாவுக்கு பிறகு திரையரங்கிற்கு ரசிகர்கள் வருவார்களா என்று இருந்த நிலையில் இவர் படத்திற்கு குடும்பம் குடும்பமாக வந்து படத்தினை பார்த்து மகிழ்ந்தனர்.

தமிழ் மட்டுமின்றி சூப்பர்ஸ்டாரை அடுத்து பெரிய மார்க்கெட்டை பெற்றுள்ளவராக விஜய் வளர்த்துள்ளார்.உலகமெங்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இவரது திரைப்பட ரிலீஸ் மட்டுமின்றி இவரது பிறந்தநாள் உள்ளிட்ட பல நிகழ்வுகளை கோலாகலமாக பலவகையில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

தற்போது இவரது பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,நடிகை மாளவிகா மோஹனன்,நடிகை கீர்த்தி சுரேஷ்,தளபதி 65 இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோரை இணைத்து ட்விட்டர் space ஒன்றை நாளை திட்டமிட்டுள்ளார் விஜயின் மேனேஜர் ஜெகதீஷ்.பல அப்டேட்கள் கிடைக்கவுள்ளது என்று ரசிகர்கள் பெரிய ஆவலுடன் காத்திருக்கின்றனர்.