தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் Firstlook போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்த படத்தின் முதல் பாடலான சிங்கப்பெண்ணே நேற்று வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையின் முக்கிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று சென்னையில் செங்குன்றம் பகுதியில் நடைபெற்றது.

Harley Davidson பைக்கில் விஜய் செல்லும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.இதனை அடுத்து அங்கு விஜயை காண ரசிகர்கள் குவிந்தனர்.விஜய் தனது ஷூட்டிங்கை முடித்துவிட்டு வழக்கம் போல் ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.