Beast அப்டேட் எப்போது...? ஹிண்ட் கொடுத்த அனிருத் !
By Aravind Selvam | Galatta | October 01, 2021 12:29 PM IST
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனவை தொடர்ந்து வெளியான மாஸ்டர் படம் வசூலிலும் சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து தனது 65ஆவது படத்தில் நடித்து வந்தார் விஜய்.
இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.கொரோனாவால் இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை,டெல்லி உள்ளிட்ட இடங்களில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடைந்து ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் நேற்று இன்ஸ்டாகிராமில் லைவாக வந்தார் அப்போது ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் அனிருத்.ரசிகர் ஒருவர் Beast குறித்து கேட்க படம் சூப்பராக ரெடி ஆகி வருகிறது படத்தின் அப்டேட்கள் மிகவிரைவில் தயாரிப்பு நிறுவனம் வெளியிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.இந்த மாதம் பூஜா ஹெக்டே மற்றும் அனிருத் பிறந்தநாட்கள் வருவதால் நிச்சயம் அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Rockstar #AnirudhRavichander about #Beast updates via Instagram LIVE! #BeastUpdate @actorvijay @hegdepooja @Nelsondilpkumar @anirudhofficial @sunpictures pic.twitter.com/fP7eVyhC5J
— #BEAST (@BeastFiIm) September 30, 2021