தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீசாக தயாராகி வருகிறது.சன் பிக்சர்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.

நெல்சன் திலீப்குமார் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.பூஜா ஹெக்டே இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் அசத்தலான டீஸர் சமீபத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

எப்போதும் விஜய் பட ரிலீசுக்கு முன் பிரம்மாண்டமாக ஒரு இசை வெளியீட்டு விழா நடைபெறும் அதில் விஜயின் பேச்சும் ரசிகர்களிடம் வெகுவாக வரவேற்பை பெரும் , சில காரணங்களால் பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை.இதனால் விஜயின் பிரத்யேக பேட்டி ஒன்றை சன் டிவி ஒளிபரப்பவுள்ளனர்.கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து விஜய் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இயக்குனர் நெல்சன் தொகுப்பாளராக மாறி கேள்விகளை விஜயிடம் கேட்டுள்ளார்.இதற்கான சில ப்ரோமோ வெளியாகி வைரலாகி வந்த நிலையில்,தற்போது ஒரு புதிய ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளனர்,ஏன் 10 வருடங்கள் பேட்டி கொடுக்கவில்லை,ரசிகர்களுக்கு அட்வைஸ் போன்றவற்றை விஜய் பகிர்ந்துள்ளது குறித்த ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்