தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனவை தொடர்ந்து வெளியான மாஸ்டர் படம் வசூலிலும் சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து தனது 65ஆவது படத்தில் நடித்து வந்தார் விஜய்.

 இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.கொரோனாவால் தள்ளிப்போன இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்களுக்கு முன் தொடங்கியது.20 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பு பிரபல நடன இயக்குனர் ஜானி நடனமமைக்கும் பாடல் ஷூட்டிங்குடன் தொடங்கியது.

நேற்று நடனஇயக்குனர் ஜானியின் பிறந்தநாளை முன்னிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவினர் இவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்,தளபதி விஜய் மற்றும் நெல்சனுடன் ஜானி இருக்கும் புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ளனர்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றன.