தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் தளபதி விஜய்.நாளை இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இவர் நடிக்கும் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை ஜூன் 21 மாலை 6 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர்.

Beast என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

செம மாஸாக உள்ள இந்த பர்ஸ்ட்லுக் குறித்து பல பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.படத்தின் மீது எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் வகையில் இந்த போஸ்டர் உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.தற்போது சர்ப்ரைஸ் அறிவிப்பாக படத்தின் இன்னொரு போஸ்ட்டரை வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விஜய் அவரது 47வது பிறந்தநாளை தொடங்கும் நேரத்தில் Beast படத்தின் செகண்ட் லுக் போஸ்ட்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.வேற லெவலில் உள்ள இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.கலாட்டா சார்பாக தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.