தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனவை தொடர்ந்து வெளியான மாஸ்டர் படம் வசூலிலும் சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து தனது 65ஆவது படத்தில் நடித்து வந்தார் விஜய்.

இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.கொரோனாவால் இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.சில மாதங்களுக்கு முன் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது,விஜய் பூஜா ஹெக்டே போன்றோர் தங்கள் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டனர்.சில பேட்ச் காட்சிகளின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது அந்த ஷூட்டிங் தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.விரைவில் மொத்த ஷூட்டிங்கும் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

thalapathy vijay beast patch scene shoot going on in jaipur nelson anirudh