அரபிக்குத்து வீடியோ பாடல் செய்த தூள் கிளப்பும் சாதனை !
By Aravind Selvam | Galatta | September 02, 2022 17:24 PM IST
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.இவர் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.
செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான வரவேற்பை பெற்று வருகிறது.தீவிரவாதிகள் ஒரு ஷாப்பிங் மாலை கைப்பற்ற அதிலிருந்து மக்களை காப்பாற்றும் ஒரு முன்னாள் அதிகாரியின் கதையாக அதிரடி,காமெடி என இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது.
பல இடங்களில் இந்த படம் வசூல் சாதனை படைத்துள்ளது.திரையரங்குகளில் வசூலை குவித்த இந்த படம் மே 11ஆம் OTT-யில் வெளியானது.இந்த படத்தின் மிகப்பெரிய ஹிட் பாடலான அரபிக்குத்து பாடல் வீடீயோவை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர்.சிவகார்த்திகேயன் வரிகளில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் துள்ளலான நடன அசைவுகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தன.
லிரிக் வீடியோவாகவே பெரிய அடித்து பல மில்லியன்களை இந்த பாடல் அள்ளி வருகிறது.தற்போது இந்த பாடல் வீடியோ 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
#ArabicKuthu - The Unstoppable, the video song hits 250 Million+ views 🔥 https://t.co/d4NyDWMbP2@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @jonitamusic @selvaraghavan @manojdft @AlwaysJani @Nirmalcuts @KiranDrk #Beast pic.twitter.com/WCYEPuqGbm
— Sun Pictures (@sunpictures) September 2, 2022