தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.இவர் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார்.

செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் ஹிட் அடித்து வருகிறது.இந்த படத்தின் டீஸர் நாளை வெளியாகவுள்ளது.

முதல் பாடலான அரபிக் குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.பாடல் வெளியீட்டுக்கு சில நாட்களுக்கு முன் நெல்சன்,அனிருத்,சிவகார்த்திகேயனுடன் போனில் விஜய் பேசுவது ப்ரோமோ வெளியிடப்பட்டு ஹிட் அடித்தது.இந்த பாடல் அடுத்து வெளியாகி இணையத்தில் சென்சேஷனல் ஹிட் அடித்து வருகிறது.பல சாதனைகளை இந்த பாடல் முறியடித்துள்ளது.

200 மில்லியனை கடந்து 5 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ள இந்த பாடல் தற்போது ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.யூடியூபில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அதிவேகமாக இந்த சாதனையை செய்யும் தென்னிந்திய வீடியோ என்ற பெருமையை பெற்றுள்ளது.