என்றென்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்த ரிலீஸாகவுள்ள திரைப்படம் வாரிசு. முதல் முறையாக முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் தயாரிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீஸாகிறது.

இதனை அடுத்து மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி67 திரைப்படத்தில் விஜய் நடிக்கிறார். விக்ரம் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு எக்கசக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பிறகு தளபதி67 படத்தின்  அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லீயின் வீட்டு விசேஷத்தில் தளபதி விஜய் கலந்து கொண்டார். முன்னதாக இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

மீண்டும் இந்த வெற்றி கூட்டணியின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் அட்லீ எனது மனைவி பிரியா கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்த நிலையில், தற்போது அவர்களது வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தளபதி விஜயின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ…
 

Smart ah irukinga naa 🤩💙#Thalapathy @actorvijay #Varisu #Vijay #VarisuPongal #Thalapathy67 #ThalapathyVijay pic.twitter.com/ANDuJqAS1r

— Galatta Media (@galattadotcom) December 19, 2022

பிரியா அட்லியின் வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டார் தளபதி விஜய் ❤️@actorvijay @Atlee_dir @priyaatlee #ThalapathyVijay #PriyaAtlee #Atlee#Varisu pic.twitter.com/Mj7Q7F9Za3

— Galatta Media (@galattadotcom) December 19, 2022

Mr & Mrs Iyakkams with #ThalapathyVijay 🫶❤️@actorvijay @Atlee_dir @priyaatlee #PriyaAtlee #BabyShower #Atlee #Thalapathy #Vijay #Varisu pic.twitter.com/YKmxhhLKWB

— Galatta Media (@galattadotcom) December 19, 2022