இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.இவரது நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு,நட்பே துணை இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Thalapathy Vijay Appreciates Naan Sirithal Trailer

இந்த இரண்டு படங்களையுமே இயக்குனர் சுந்தர் சி தயாரித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்குகிறார்.ஐஸ்வர்யா மேனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

Thalapathy Vijay Appreciates Naan Sirithal Trailer

நான் சிரித்தால் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினையும் இயக்குனர் சுந்தர் சி தயாரிக்கிறார்.இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த ட்ரைலரை தளபதி விஜய் பார்த்து மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வரும் லல்லுவிடம் தெரிவித்துள்ளார்.

Thalapathy Vijay Appreciates Naan Sirithal Trailer

நான் சமீபத்தில் பார்த்து ரசித்த மிகசிறந்த ட்ரைலர் நான் சிரித்தால் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.நான் சிரித்தால் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள லல்லு இதனை படத்தின் இயக்குனர் ராணாவுடன் பகிர்ந்துள்ளார்.தளபதி விஜய்க்கு படக்குழுவினர் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.