நடிகர் விஜய் நடித்த  வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகை நாளில் வெளியாகவிருக்கும் நிலையில் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு திரையுலக வட்டாரத்தில் பெருமளவு எதிர்பார்க்கபட்டிருந்தது. இதனையொட்டி அவரது அடுத்த படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 67’ என பெயரிடப்பட்டது. இப்படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். ஏற்கனவே லோகேஷ் விஜய் கூட்டணி ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் வெற்றி பெற்றது. இதில் விஜய் கதாபாத்திரத்தை மாறுபட்ட தோற்றத்தில் வடிவமைத்தது ரசிகர்களை வெகுவாக லோகேஷ் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லோகேஷ் - ன் முந்தைய படமான கமல் ஹாசனின்  ‘விக்ரம்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மற்றும் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ் (எல்.சி.யு) மீதான எதிர்பார்ப்பையும் இந்த படம் கொண்டுள்ளது என்று  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்த நிலையில்

இயக்குனரும், தயாரிப்பாளரும் பிரபல நடிகருமான மனோ பாலா தனது ட்வீட்டர் பக்கத்தில் “தளபதி 67-படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது… லோகேஷ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன்… அதே எனர்ஜி..புல் ஸ்விங்.. முதல் நாளே.. தூள்..” தளபதி  67 படம் குறித்த அப்டேட்டை பதிவிட்டுள்ளார்.

Thalapathi 67- shoot starts today...met lokesh and engal thalapathi...same energy and full swing..first day itself..thool...

— Manobala (@manobalam) January 2, 2023

 

ஏற்கனவே வாரிசு திரைப்படம் வெளியாகும் உற்சாகத்தில் இருக்கும் விஜய் ரசிகர்களை இந்த அப்டேட் மேலும் குதுகலபடுத்தியது. தற்போது சமூக வலைதளத்தில் தளபதி 67 குறித்த அப்டேட்டையும் அதுகுறித்த மகிழ்ச்சியையும் வெளிபடுத்தியும் பகிர்ந்தும் வருகின்றனர். மேலும் தளபதி 67 திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக உருவாகவுள்ளது என்று சமீபத்திய பேட்டியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டிருந்தார். படத்தில் மன்சூர் அலிகான், இயக்குனர் கெளதம் மேனன் பலர் நடிக்கவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் பொங்கலில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படம் வெளியாகவிருக்கும் நிலையில் அந்த படத்திற்கான விளம்பர வேலை நடைபெற்று கொண்டிருப்பதால் அதன் பிறகே தளபதி 67 குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டர்கள் அல்லது பட பூஜை புரோமொஷன்கள் வெளியாக வாய்ப்புள்ளது.