தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் தளபதி 66.

தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இந்த படத்தினை இயக்குகிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சரத்குமார் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.ஷாம்,யோகி பாபு உள்ளிட்டோர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

பாடல் ஷூட்டிங்குடன் இந்த படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்தது.இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ஹைதெராபாத்தில் தொடங்கியது.இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக ஷாம் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்,மேலும் விஜயின் சில புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றது.இவற்றை கீழே உள்ள லிங்கில் காணலாம்