தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் தளபதி விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது படங்கள் வெளியானாலே திரையரங்கங்கள் திருவிழாவாக காட்சியளிக்கும்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர்  படம் 2021 பொங்கலை முன்னிட்டு வெளியானது.

கொரோனவை அடுத்து முதல் பெரிய படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரிய வெற்றி படமாக மாறியது மாஸ்டர்.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் Beast படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.விஜய் நடிக்கும் அடுத்த படத்தினை பல இயக்குனர்கள் இயக்கப்போகிறார்கள் என்ற தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தன,அதில் முக்கியமான ஒன்று தளபதி 66 படத்தினை தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி இயக்கவுள்ளார்.

தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு இந்த படத்தினை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார் என்பதும் தான்.கிட்டத்தட்ட இந்த படம் உறுதியாகிவிட்டது ஆயுத பூஜைக்கு படம் பூஜையுடன் தொடங்கவுள்ளது என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

தற்போது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற வம்சி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்றும் அதனை பற்றி தற்போதே தெரிவித்து சுவாரசியத்தை உடைக்க விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.இவர் சொல்வதில் இருந்தே இது விஜயுடன் தொடங்கவுள்ள படம் தான் என்பது உறுதியாகிவிட்டதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது