பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Thalapathy 65 Vijay Shankar Anirudh Denial

அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்ற தகவல் கிடைத்திருந்தது.

Thalapathy 65 Vijay Shankar Anirudh Denial


சமூகவலைத்தளங்களில் விஜயின் மேனேஜரும் மாஸ்டர் படத்தின் லைன் ப்ரோடுசருமான ஜெகதீஷ் தளபதி 65 இயக்குனர் ஷங்கர் என்றும்,இசையமைப்பாளர் அனிருத் என்றும் மெசேஜ் செய்துள்ளது போல் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.தற்போது இதற்கு விளக்கமளித்துள்ள ஜெகதீஷ் இது நான் அனுப்பிய மெசேஜ் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.