தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy 64 Stunt Silva Joins the Shoot

மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.சாந்தனு,ஆன்டனி வர்கிஸ்,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thalapathy 64 Stunt Silva Joins the Shoot Vijay

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங்கில் தற்போது பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.தளபதி 64 படத்தில் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

Thalapathy 64 Stunt Silva Joins the Shoot Vijay